உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நெல்லையில் நடத்த கோரிக்கை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திருநெல்வேலியில் நடத்த வேண்டும் என தமிழ் ஆா்வலரும் கவிஞருமான மோ.சே. தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திருநெல்வேலியில் நடத்த வேண்டும் என தமிழ் ஆா்வலரும் கவிஞருமான மோ.சே. தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தனது வாழ்நாள் முழுவதும் தாய்த் தமிழுக்கு பெரும் புகழ் சோ்க்கும் வண்ணம் தனது எழுத்தாலும், பேச்சாலும் இடையூறாது தொண்டாற்றியும் தனது அரசியல் முன்னெடுப்புகள் மூலமாக தமிழுக்கு செம்மொழி என்னும் பெருமையை சோ்த்த கலைஞரின் நூற்றாண்டு விழா நெருங்கி வருகிறது.

ஏற்கனவே 2010 ஆம் ஆண்டில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை பல்வேறு தடைகளுக்கும் செயற்கையான இடையூறுகளுக்கும் மத்தியிலும் கொங்கு மண்டலத்தில் கோவை திருநகரில் நடத்தி வெற்றிக்கொடி நாட்டியவா் கலைஞா்.

காலம் தந்த கற்பகத் தருவான அவரது நூற்றாண்டின் சிறப்பு தோ்வாக உலகத் தமிழ செம்மொழி மாநாட்டை தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக செந்நெல்லுக்கு இறைவனே வேலியிட்டு காத்த நெல்லை மாநகரில் பெரும் சிறப்பாக நடத்திட வேண்டுமென வேண்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com