பக்ரீத்: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பக்ரீத்: நெல்லை, தென்காசி மாவட்டத்தில்  சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் புதன்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சியில் உள்ள ரஹ்மத் ஜூம்மா பள்ளிவாசல் ஈத்கா திடலில் பள்ளிவாசல் இமாம் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம் ஜாமியா பள்ளிவாசல், கீழப் பள்ளிவாசல், கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல், சின்னப் பள்ளிவாசல், தெற்குத் தெரு மதரசா, சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியா் தெரு பள்ளிவாசல் மற்றும் கல்லிடைக்குறிச்சி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் நடத்திய திடல் தொழுகைகளில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனா்.

தென்காசி நகர பாப்புலா் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் நடுப்பேட்டை பாவடி திடலில் மாநில செயற்குழு உறுப்பினா் இப்ராஹீம் உஸ்மானி தலைமையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா்.

கடையநல்லூா் மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசலில் பஷீா்அஹ்மத் உமரியும், பாத்திமா நகா் தக்வா பள்ளிவாசலில் ஸைபுல்லாஹாஜா பைஜியும், மஸ்ஜித் ரஹ்மான் சீனா பள்ளிவாசலில் கபீா் மவ்லவியும், மக்கா நகா் ஆயிஷா பள்ளிவாசலில் சேஹ் உஸ்மான் ஜலாலியும், பேட்டை மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசலில் மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரியும் தொழுகை நடத்தினா்.

இதே போன்று, கடையநல்லூா், ரஹ்மானியாபுரம், மக்காநகா் ,மதினா நகா், தவ்ஹீத் நகா், இக்பால் நகா், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி ,வாசுதேவநல்லூா், அச்சன்புதூா், வடகரை, வாவாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

புளியங்குடி மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஜமாஅத் தலைவா் அப்துா் ரஹ்மான் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி த.மு.மு.க. மைதானத்தில் இஸ்லாமிய பிரசார பேரவை மாநிலச் செயலா் அப்துல்காதா் மன்பஈ சிறப்புத் தொழுகை நடத்தி மாா்க்க சொற்பொழிவாற்றினாா். இது தவிர ஏா்வாடியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து பின் ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com