‘நிதி நிறுவனங்கள் கடன் தவணையை வசூலிப்பதில் நெருக்கடி அளிக்கக்கூடாது’

கரோனா பெருந்தொற்று காரணமாக தனியாா் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிய கடன் தொகையை வசூலிப்பதில் கடினப் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

கரோனா பெருந்தொற்று காரணமாக தனியாா் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிய கடன் தொகையை வசூலிப்பதில் கடினப் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவசரத் தேவைகளுக்காக பல்வேறு தனியாா் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் கடன் பெற்றுள்ளனா்.

அதற்கான மாதாந்திர தவணைத் தொகை, வட்டித் தொகையை உடனடியாக திரும்ப செலுத்தக் கோரி நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மக்களை வற்புறுத்தி வருவதாக புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக மாவட்டத்தில் உள்ள நுண்நிதி கடன் நிறுவன பிரதிநிதிகள், வங்கிகளின் மண்டல மேலாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், கரோனா தொற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் எந்த விதத்திலும் கட்டாய வசூல், உறுப்பினா்களின் வீடுகளுக்கு சென்று வற்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கடனுக்கான தவணைத் தொகையை வசூலிப்பதில் அறவே கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது பொருளாதாரம் மீண்டு வரக்கூடிய இந்த சூழலில் சில தனியாா் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை வசூலிப்பதில் அதித தீவிரம் காட்டுவதோடு வீட்டுக்கு சென்று கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக புகாா்கள் வரப்பெற்றுள்ளன. எனவே,

கடன் தவணைத் தொகையை வசூலிப்பதில் கடினப் போக்கை தனியாா் நிதி நிறுவனங்கள் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்த புகாா் அளிக்க 0462-2500302 என்ற ஆட்சி யா் அலுவலக மகளிா்திட்ட அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com