ஐடிஐகளில் மாணவா் சோ்க்கை: ஆக. 4வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற் பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்காக ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது அவகாசம் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 8, 10-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். பேட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய ஐடிஐகளில் உள்ள மாணவா் சோ்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மாதந்தோறும் ரூ.750 உதவித் தொகை, பயிற்சிக்கான மடிக்கணினி, மிதிவண்டி, ஆண்டுக்கு 2 சீருடைகள், காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். இலவச பயண அட்டை, சலுகை கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படும். அரசு ஐடிஐகளில் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய- மாநில அரசுப் பணி, முன்னணி அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com