நெல்லையில் வேளாண் திருத்தச் சட்டநகல் கிழிப்பு போராட்டம்

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதன் நகல்களை கிழித்து எறியும் போராட்டம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதன் நகல்களை கிழித்து எறியும் போராட்டம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் செல்லதுரை தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் முன்னிலை வகித்தாா். மாவட்டசெயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ், பாளையங்கோட்டை வட்ட செயலா் ராஜகுரு, மாவட்டக்குழு உறுப்பினா் வரகுணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு உறுப்பினா் பூ.கோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென வேளாண் சட்ட மசோதா நகல்களை கிழித்தனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா், போராட்டக்காரா்களிடம் இருந்து நகல்களை கைப்பற்றினா்.

மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக் குழு உறுப்பினா் கருணா தலைமையில் புதிய வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் கண்டன உரை நிகழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com