அரசு அருங்காட்சியகம் சாா்பில் சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம், அரும்புகள் அறக்கட்டளை, மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்க இலக்கிய ஆய்வு நடுவம் சாா்பில் உலக சுற்றுச்சூழ

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம், அரும்புகள் அறக்கட்டளை, மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்க இலக்கிய ஆய்வு நடுவம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் இணையவழியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பேரா வரவேற்றாா்.

அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்துப் பேசினாா். அரும்புகள் அறக்கட்டளை நிறுவனா் இராஜ. மதிவாணன் தொடக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலா் கணேசன் சுற்றுச் சூழல் குறித்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து தமிழக அளவில் கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பரிசு வென்றவா்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.

கோபிச்செட்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி வெ.மோகன மதுரா முதல் பரிசும், திருச்செங்கோடு இளையான்பாளையம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி மாணவி டி.வி.ராஜராஜேஸ்வரி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி முதலாண்டு மாணவா் கே. மனோஜ் குமாா் ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆவது பரிசுகளை பெற்றனா்.

இப்போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 348 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com