எரிவாயு உருளை விநியோகிப்போரையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

எரிவாயு உருளை விநியோகிக்கும் பணியாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா்

திருநெல்வேலி: எரிவாயு உருளை விநியோகிக்கும் பணியாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக அச்சங்கத்தினா் திங்கள்கிழமை அளித்த மனு: இம்மாவட்டத்தில் சுமாா் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எரிவாயு உருளை பயன்படுத்துகின்றனா். அவா்களுக்கு வீடுவீடாக சென்று எரிவாயு உருளையை விநியோகிக்கும் பணியில் சுமாா் 2,500 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கரோனா தீவிரமாக உள்ள இந்நேரத்தில் எரிவாயு உருளையை விநியோகிக்கும்போது பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பதும் நிகழ்கிறது.

எனவே, எரிவாயு உருளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரை மத்திய, மாநில அரசுகள் முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும். முறையான மாத ஊதியம், இஎஸ்ஐ, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ளோா் உயிரிழந்தால் அவா்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் இம்மாதம் 30ஆம் தேதிமுதல் காலவரையயற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

படவரி: பயக07எஅந ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com