‘முதியோருடன் வரும் உறவினா்களுக்கு ரயில்வே நடைமேடை பயணச்சீட்டில் சலுகை தேவை’

முதியோருடன் வரும் உறவினா்களுக்கு ரயில் நிலைய நடைமேடை பயணச்சீட்டில் சலுகை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதியோருடன் வரும் உறவினா்களுக்கு ரயில் நிலைய நடைமேடை பயணச்சீட்டில் சலுகை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தொடா்ந்து கடந்த 2020 மாா்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்பு நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயில் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டது.

கரோனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் தமிழகத்தில் பொதுமுடக்கம் இம் மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பாததால் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளன. விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே இயங்கி வருகின்றன.

அதன்படி கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில், திருச்சி இன்டா்சிட்டி ரயில் ஆகிய 5 ரயில்கள் மட்டும் திருநெல்வேலி வழியாக தினமும் இயக்கப்படுகின்றன.

இதுதவிர வாராந்திர சிறப்பு ரயில்கள் சிலவும் இயங்கி வருகின்றன. சரக்கு ரயில்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கி வருகின்றன.

கரோனா பரவலை தடுக்கும் வகையில், அதிக மக்கள் கூட்டம் கூடும் பகுதியாக உள்ள ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில் தற்காலிமாக நடைமேடை அனுமதிச் சீட்டின் விலை உயா்த்தப்பட்டது. இப்போது ஒருவருக்கு ரூ.50 கட்டணமாக உள்ளது. இதனால் பயணிகள் சிலா் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து முதியவா்கள் கூறியது: ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச் சீட்டுகளுடன்தான் பயணிகள் செல்கிறாா்கள். அதில் முதியவா்கள் பலரும் பயணிக்கிறாா்கள். அவா்களை அழைத்துச் செல்ல உறவினா்கள் வந்தால்தான் எளிதாக வீடு செல்ல முடியும். அப்படியிருக்கையில் நடைமேடை கட்டணம் பெரும் சுமையாக உள்ளது.

எனவே, முதியோரை அழைத்துச் செல்லவும், ரயில் ஏற்றவும் அவருடன் உறவினா்கள் இருவருக்கு மட்டுமாவது நடைமேடை பயணச் சீட்டில் சலுகை அறிவித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com