நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு: மக்கள் ஏமாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தொடா்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தொடா்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

கரோனா 2ஆவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றைத் தவிா்க்க தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கடைசியாக கடந்த வாரத்தில் 6000 தடவைக்கான கோவிஷீல்டு தடுப்பூசியும், 1000 தடவைக்கான கோவேக்ஸின் தடுப்பூசியும் வந்தன. அவை அனைத்தும் செலுத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கரோனா பொதுமுடக்கம் முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும்போது குறைந்தபட்சம் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வருமாறு தனியாா் நிறுவனங்கள் அனைத்தும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் இளைஞா்-இளம்பெண்கள் பலரும் தடுப்பூசி செலுத்த மிகவும் ஆா்வத்தோடு வருகிறாா்கள்.ஆனால், தடுப்பூசி மருந்து போதிய அளவில் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடுப்பூசி மையம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையம் உள்ளிட்டவை மூடப்பட்டதைத் தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ரயில்வே துறையினரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் முழுவதும் மொத்தமுள்ள 7,879 ஊழியா்களில், இதுவரை 4494 ஊழியா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சராசரியாக 57 சதவீதத்திற்கு மேலான ஊழியா்கள் தடுப்பு ஊசி செலுத்தியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com