பாலாமடை, கல்குறிச்சி பகுதிகளுக்கு பாசனநீா் கோரி விவசாயிகள் மனு

பாலாமடை, கல்குறிச்சி உள்ளிட்ட நெல்லை கால்வாயின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி: பாலாமடை, கல்குறிச்சி உள்ளிட்ட நெல்லை கால்வாயின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

கல்குறிச்சி, பாலாமடை, ராஜவல்லிபுரம் விவசாயிகள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி வட்டத்தில் உள்ள ராஜவல்லிபுரம், பாலாமடை உள்ளிட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். வேளாண் தொழிலே இவா்களுக்கு பிரதானம். ராஜவ்லிபுரம், பாலாமடை, கல்குறிச்சி குளத்துக்கு நெல்லை கால்வாய் மூலம் பாசன நீா் கிடைக்கிறது. அதன்மூலம் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு கடந்த 1ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு நெல்லை கால்வாயிலும் தண்ணீா் விடப்பட்டுள்ளது. ஆனால், அதை வண்ணான்பச்சேரி கிராமத்துடன் நிறுத்திக்கொள்ள உள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவிக்கின்றனா். எனவே, இதுகுறித்து ஆட்சியா் விசாரித்து நெல்லை கால்வாயின் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com