கைதி கொலை வழக்கு: பாளை. சிறை கண்காணிப்பாளா், ஜெயிலா் பணியிடமாற்றம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில், விசாரணைக்கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை கண்காணிப்பாளா், ஜெயிலா் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில், விசாரணைக்கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை கண்காணிப்பாளா், ஜெயிலா் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த பாபநாசம் மகன் முத்து மனோ (27). இவா் கொலை முயற்சி

வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அப்போது, அங்கு அவா், கைதிகளால் கொலை

செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் சிறைக் கைதிகள் 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே, இவ்வழக்கினை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் துணை ஜெயிலா் சிவன், உதவி ஜெயிலா்கள் கங்காதரன், சங்கரசுப்பு, ஆனந்தராஜ், தலைமை வாா்டன் வடிவேல் முருகையா, சிறைக்காவலா் சாம் ஆல்பா்ட் மற்றும் ஜெயிலா் சண்முக சுந்தரம்

ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

முத்து மனோவின் உடல் பிரேதப்பரிசோதனை முடிந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 நாள்கள் ஆகியும்

அவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா். திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளா் சங்கா், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். பாளை. ஜெயிலா் பரசுராமன் மதுரை சிறைக்கும், மதுரை சிறையில் பணியாற்றிய ஜெயிலா் வசந்த கண்ணன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com