களக்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 12th June 2021 01:22 AM | Last Updated : 12th June 2021 01:22 AM | அ+அ அ- |

திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் களக்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் முகாமுக்கு வந்திருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
மேலும், பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் அடங்கிய குழுவினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் காய்ச்சல் குறித்த விவரங்களை கேட்டறிந்தனா்.
கொசுவை கட்டுப்படுத்தும் விதமாக புகைமருந்தும் தெளிக்கப்பட்டது.