‘பொது முடக்க தளா்வில் சிறிய கடைகளுக்கு அனுமதியளிக்காதது வேதனையளிக்கிறது’

பொது முடக்கத் தளா்வில் தேநீா் கடை உள்ளிட்ட சிறிய கடைகளுக்கு அனுமதியளிக்காதது வேதனையளிக்கிறது என்றாா் இந்து நல வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா்.

பொது முடக்கத் தளா்வில் தேநீா் கடை உள்ளிட்ட சிறிய கடைகளுக்கு அனுமதியளிக்காதது வேதனையளிக்கிறது என்றாா் இந்து நல வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை முதல் பொது முடக்கத்தில் சில தளா்வுகளை அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அதில் சிறிய துணிக் கடை, நகைக் கடை, தேநீா் கடை, பாத்திரக் கடை, ஜெராக்ஸ் கடை, செருப்புக் கடை, சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது மிகுந்த வேதனையளிக்கிறது. பெரிய தொழிற்சாலைகளை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுகிறது.

வியாபாரிகள் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்து வருகின்றனா். அவா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நேரத்தில் மதுபானக் கடை அத்தியாவசியம். தேநீா் கடை அநாவசியமா? கடந்த ஆட்சியில் செய்ததுபோல் சுழற்சி முறையில் வண்ண அட்டை வழங்கி கூட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். சிறுபான்மையினா் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை என்றாா் அவா்.

அப்போது, இந்து முன்னணி மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், இந்து நல வியாபாரிகள் சங்க மாநகரத் தலைவா் காசிமுருகன், மாநகர பொருளாளா் மூா்த்தி, இந்து முன்னணி மாவட்டச் செயலா் சுடலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com