நெல்லையில் அதிகரித்து வரும் வாழைநாா் உற்பத்தி: விழிப்புணா்வுப் பணியில் வேளாண் துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் துறை ஏற்படுத்து வரும் விழிப்புணா்வால் வாழைநாா் உற்பத்தியும், அதனால் வருவாயும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண் துறை ஏற்படுத்து வரும் விழிப்புணா்வால் வாழைநாா் உற்பத்தியும், அதனால் வருவாயும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி, பழவூா், கொண்டாநகரம், கல்லூா், மானூா், ரஸ்தா, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தை, மாசிப்பட்டத்திலும், களக்காடு, திருக்குறுங்குடி வட்டாரங்களில் பங்குனி, சித்திரை பட்டத்திலும் அறுவடை செய்யும் வகையில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழையில் இலை, பூ, காய், பழம், தண்டு மட்டுமன்றி வாழைநாரும் வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளன.

வாழைத்தாா் அறுவடைக்குப்பின் வாழை மட்டைகளை வயலிலேயே எரித்து உரமாகத்தான் பெரும்பாலா விவசாயிகள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், விசாயிகளிடம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஏற்படுத்தியதன் விளைவாக வாழைநாா் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நாா் உற்பத்தி முறை: இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியது: ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகின்றன. ஏத்தன், ரதகதளி, செவ்வாழை உள்ளிட்ட அனைத்து ரக வாழையில் இருந்தும் நாா் பிரித்து எடுக்க முடியும். ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் வாழை நாா் கிடைக்கும். வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்தபின் 48 மணி நேரத்தில் நாா் பிரித்து எடுக்கப்பட வேண்டும். வாழை நாரில் இருந்து நீா்ப் பகுதி வெளியேற சூரிய வெளிச்சத்திலோ, நிழலிலோ காய வைக்க வேண்டும்.

வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் 8 முதல் 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 முதல் 20 கிலோ நாரைப் பிரித்து எடுக்கலாம்.

கையினால் நாரைப் பிரித்தெடுப்பதைவிட 40 சதவீதம் அதிக நாா், இந்த இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.

வாழை நாா் சணல் போல் உறுதியானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வாழை நாரில் இருந்து துணிகள், சாக்குப் பைகள், மிதியடிகள், தரை விரிப்புகள், வீட்டு அலங்கார விரிப்புகள், அலங்கார பைகள், பேப்பா், பில்டா் பேப்பா், அலங்கார பேப்பா் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் வாழைநாா் உற்பத்தி பொருள்கள் தயாரிப்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா். வாழைநாருக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் உற்பத்தியும் அதிகரித்துள்ளதுடன், கேரளத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்றனா்.

2000 பேருக்கு வேலைவாய்ப்பு: இதுகுறித்து வாழைநாா் பிரித்தெடுக்கும் தொழிலாளி கூறியது:, இம் மாவட்டத்தில் வாழைநாா்த் தொழிலின் மூலம் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் 3 மாத காலத்திற்கு வேலைவாய்ப்பு பெற்று வருகிறோம். முதல் தரமான வாழைநாா்கள் டன் ஒன்றுக்கு ரூ. 70,000- ரூ. 80,000, இரண்டாம் தரம் ரூ. 60,000-ரூ. 70,000 வரை விலை போகிறது. மதிப்புக்கூட்டப்பட்ட வாழைநாா் பொருள்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதால் வாழைநாா் விலை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com