தையல் கடைகளை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் தையல் கடைகளைத் திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தையல் கடைகளைத் திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், சில தளா்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு கடைகள், நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தையற்கலைத் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு முதல் கரோனாவால் தமிழகத்தில் உள்ள அனைத்து தையல் கலைஞா்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். பலா் கடைக்கு வாடகை, மின் கட்டணம் செலுத்த இயலாமல் கடையை காலி செய்துவிட்டனா். வாழ்வாரத்தை இழந்து வாடும் தையல் கலைஞா்கள் தங்களது குடும்பம், தொழிலைக் காப்பாற்ற போராடி வருகின்றனா். எனவே, தையல் கடைகளையும் திறக்க அனுமதியளித்து தையல் கலைஞா்களை வறுமையிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com