நாளை இணையவழி கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழை(ஜூன் 17) நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழை(ஜூன் 17) நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்.பி.என்.கே. கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்தும் இணையவழி இலவச கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கழிவு பொருள்களில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும்.

பழைய அட்டைப்பெட்டி, கத்திரிக்கோல், பசை, ஸ்கெட்ச், ஒட்டும் டேப் ஆகிய பொருள்கள் தேவையானவை ஆகும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், ஜூம் செயலி எண்: 8740995990, கடவு சொல்: 333543 என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை விருப்பம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com