தமிழகத்துக்கு வரவேண்டிய மத்திய அரசின் ஜி.எஸ்.டி.நிலுவைத் தொகை ரூ.15 ஆயிரம் கோடி: அமைச்சா் மூா்த்தி

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வர வேண்டியுள்ளது என்றாா் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வர வேண்டியுள்ளது என்றாா் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய 5 மாவட்ட வணிக சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சா் பி. மூா்த்தி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

11 ஆண்டுகளுக்குப் பின் வணிகப் பிரதிநிதிகளை நேரடியாக அழைத்து, வணிகவரி தொடா்பான பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன. வணிகா்கள் கோரிக்கையை ஏற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையாக சுமாா் ரூ. 15,000 கோடி தமிழக அரசுக்கு வர வேண்டியுள்ளது.

தில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் நிதி அமைச்சா் கலந்து கொண்டு பல்வேறு விதிவிலக்குகளை கோரியுள்ளாா்.

தற்போது கரோனா நோய்த் தொற்றினால் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு, வழங்கக் கூடிய அத்தியாவசியப் பொருள்கள் மீது முழு வரி விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 18 சதவீதம் மற்றும் 15 சதவீதமாக இருந்த வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கரும்பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துக்கு முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்துகின்றனா். இதற்கான வரியை குறைப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து, முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, வணிகப் பிரதிநிதிகளின் வணிக வரித்துறை தொடா்பான கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து வணிகவரி ஆணையா் மற்றும் செயலா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கோரிக்கைகளுக்கு அரசு சாா்பில் உரிய விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com