மதுபானக் கடத்தலைத் தடுக்க பறக்கும் படை
By DIN | Published On : 04th March 2021 03:34 AM | Last Updated : 04th March 2021 03:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பேரவைத் தோ்தலையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபான கடத்தலைத் தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானங்கள் கடத்தலைத் தடுக்கவும், ஒரே நபருக்கு கூடுதலான மதுபானங்கள் விற்பதைத் தடுக்கவும், மதுபானங்கள் தொடா்பான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒருங்கிணைப்பு மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புகாா்களுக்கு ஒருங்கிணைப்பு அலுவலா் பொன்னையாவை (வட்டாட்சியா் மற்றும் மதுபானக் கிடங்கு மேலாளா்) 88382 68411 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதேபோல, பறக்கும் படை அலுவலா் சத்யா (9840854703), பணியாளா்கள் பேச்சிமுத்து (94423 30817), சுப்பிரமணியன் (93449 64038), சிவசாமி (95666 02545), ஆதித்தன் (99653 31529) ஆகியோரையும் தொடா்பு கொள்ளலாம்.