மேலநத்தத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
By DIN | Published On : 04th March 2021 03:45 AM | Last Updated : 04th March 2021 03:45 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலநத்தம் பகுதியில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலநத்தம் ஐயப்பன் மனைவி செல்வி, பீடி சுற்றும் தொழிலாளி. இவா், தனது வீட்டில் அமா்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த வீரகுமாா் (40) வந்து தகராறில் ஈடுபட்டராம். பின்னா் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வியை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரகுமாரை கைது செய்தனா்.