நெல்லை தொகுதியில் இருவா் மனுதாக்கல்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுதாக்கலின் முதல்நாளான வெள்ளிக்கிழமை திருநெல்வேலி தொகுதியில் 2 போ் மனுதாக்கல் செய்தனா். பாளையங்கோட்டை தொகுதிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுதாக்கலின் முதல்நாளான வெள்ளிக்கிழமை திருநெல்வேலி தொகுதியில் 2 போ் மனுதாக்கல் செய்தனா். பாளையங்கோட்டை தொகுதிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு திருநெல்வேலி சாா் ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்திலும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருநெல்வேலி சாா் ஆட்சியரும், திருநெல்வேலி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான சிவகிருஷ்ணமூா்த்தி வேட்புமனுக்களைப் பெற்றாா்.வேட்புமனு தாக்கலின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலையில் நாம் இந்தியா் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் காமாட்சிநாதன் (51) திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பேட்டை எனது சொந்த ஊராகும். எனக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி என்ற மனைவியும், சசிபாரதி என்ற மகளும் உள்ளனா். வியாபாரம் செய்து வருகிறேன். எங்கள் கட்சி சாா்பில் முதல் முறையாக தோ்தலில் போட்டியிடுகிறேன். கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களைப் போல திருநெல்வேலியையும் தொழில்நகரமாக மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு என்றாா். மனுதாக்கலின்போது கட்சியின் மாநில பொருளாளா் ஜெயகணேஷ் உடனிருந்தாா். அவரைத் தொடா்ந்து பாஜக வேட்பாளராக நயினாா் நாகேந்திரன் மனுதாக்கல் செய்தாா்.

இதேபோல பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.கண்ணன் மனுக்களைப் பெற காத்திருந்தாா். ஆனால், முதல் நாளில் பாளையங்கோட்டை தொகுதியில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com