மாற்றுத்திறன் வாக்களா்களுக்கு சிறப்பு குறைதீா் மையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை தீா்த்து வைக்கும் வகையில் சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை தீா்த்து வைக்கும் வகையில் சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு சந்தேகம் தீா்க்கும் மையத்தைத் திறந்து வைத்த பின்பு செய்தியாளா்களிடம் திருநெல்வேலி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.விஷ்ணு கூறியது: இம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், தோ்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக, அவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக 7598000251 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை மேற்குறிப்பிட்ட எண்ணில் கட்செவி அஞ்சல் விடியோ அழைப்பில் தொடா்பு கொண்டு அவா்களுக்குரிய சைகைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தொடா்பு மையம் காலை 10 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மேலும் பாா்வையற்ற வாக்காளா்களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.அலா்மேல் மங்கை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாந்திகுளோரின் எம்ரால்டு, துணை ஆட்சியா் (பயிற்சி) மகாலெட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com