ராதாபுரம் தொகுதிஅதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
ராதாபுரம் தொகுதிஅதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் உஷாவிடம் மனுதாக்கல் செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வெற்றிபெறும்.அது, கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், சாதனைகளுக்கு வெகுமதியாக அமையும். இந்தத் தொகுதியில் இருந்துதான் முதல் வெற்றி செய்தி வெளிவரும். 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம். அ.தி.மு.க தான் ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றாா். மாற்று வேட்பாளராக வள்ளியூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் இ.அழகானந்தம் மனுதாக்கல் செய்தாா்.

இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்புச்செயலா் ஏ.கே.சீனிவாசன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சௌந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், ஆவரைகுளம் பால்துரை, பா.ஜ.க. மாவட்டத் தலைவா் மகராஜன், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.பி.தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com