அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்: சொத்து மதிப்பு ரூ. 208 கோடி

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா்கள் இசக்கிசுப்பையா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அதில், தனக்கு ரூ. 208 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா்கள் இசக்கிசுப்பையா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அதில், தனக்கு ரூ. 208 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் இசக்கிசுப்பையா போட்டியிடுகிறாா். அவா், சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் பிரதிக் தயாளிடம் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அமைப்புச் செயலா் மனோஜ்பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் செவல் முத்துசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் இசக்கிசுப்பையா கூறும்போது, அம்பாசமுத்திரம் தொகுதியில் கன்னடியன் கால்வாய் விவசாயம் பிரதான பிரச்னையாக உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் முதல் தேதியில் கால்வாயில் தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

முன்னதாக, அம்பாசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து மோட்டாா் பைக்குகளில் தொண்டா்களுடன் சேரன்மகாதேவி வரை அவா் பேரணியாக வந்தாா். வேட்புமனு தாக்கல் செய்தபின்னா் அவருக்கு தொண்டா்கள் கிரேன் மூலம் பெரிய பூமாலை அணிவித்தனா்.

சொத்து மதிப்பு:

தனது பெயரில் ரூ. 3 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 472.48 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 208 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 936 மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி மீனாட்சி பெயரில் ரூ. 3 கோடிய 6 லட்சத்து 42 ஆயிரத்து 296.96 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 30 கோடியே 93 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com