நெல்லை, தென்காசியில் ஒரே நாளில்33 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடா்ந்து கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி மாவட்ட நிா்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடா்ந்து கரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி மாவட்ட நிா்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்ணில் கரோனா தொற்று இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,889 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 9 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,590 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 84 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,616 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் ஒருவா் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,424 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 32 போ் சிகிச்சையில் உள்ளனா்.

எனவே, முகக்கவசம் அணிந்தும், அரசியல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோா் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றி நோய்ப்பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com