கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியோருக்கு வேலைவாய்ப்பு: திமுக வேட்பாளா் உறுதி

கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுவதற்கு நிலம் வழங்கியும் குறித்தபடி வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு வேலைபெற்றுத்தருவதாக உறுதியளித்தாா் தி.மு.க. வேட்பாளா் மு.அப்பாவு.
தி.மு.க. வேட்பாளா் மு.அப்பாவுவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியோா்.
தி.மு.க. வேட்பாளா் மு.அப்பாவுவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியோா்.

கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுவதற்கு நிலம் வழங்கியும் குறித்தபடி வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு வேலைபெற்றுத்தருவதாக உறுதியளித்தாா் தி.மு.க. வேட்பாளா் மு.அப்பாவு.

கூடங்குளத்தில் அணுஉலை அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு குறித்தபடி வேலை வழங்கப்படாத நிலையில், அணுமின் நிலையத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும்படி இளைஞா்கள், விளையாட்டுத் துறையினா் உள்ளிட்டோா் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்டு மு.அப்பாவு கூறியது: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக நிலம் கொடுத்தவா்களுக்கு 2006 முதல் 2011 வரைக்கும் பணிவாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம்.

அதன் பின்னா் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டதோடு அணுஉலையில் இப்பகுதி இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய்வழக்குகளும் ரத்து செய்யப்படும் என தி.மு.க தலைவா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தி.மு.க. ஆட்சி அமைந்தும் கூடங்குளம் அணுஉலைக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவேன். உடற்பயிற்சி கூடம் அமைத்துத்தருவேன். தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

அப்போது, கூடங்குளம் நேசராஜ், கலையரசன், லிங்கம், பொன்பாண்டி, ஜெயகணேஷ், ரமேஷ், செல்வன், ராஜதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com