ராதாபுரம் தொகுதியில் அதிக சுயேச்சைகள்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 151 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 151 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 40 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். அதில் அமமுக வேட்பாளா் பால் கண்ணன் உள்ளிட்ட 24 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் திங்கள்கிழமை நாம் இந்தியா் கட்சியின் வேட்பாளா் காமாட்சிநாதன், சுயேச்சை வேட்பாளா் கோகிலா ஆகியோா் வேட்புமனுக்களை திரும்பப் பெற்ால் 14 போ் போட்டியில் இடம்பெற்றனா். அதன்விவரம்:

1. க.கலாநிதி (பகுஜன் சமாஜ், யானை), 2. நயினாா் நாகேந்திரன் (பாஜக, தாமரை), 3. ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (திமுக, உதயசூரியன்), 4. சத்யா (நாம் தமிழா் கட்சி, விவசாயி), 5. மா.சுந்தர்ராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்-மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மூன்று நட்சத்திரம்), 6. ப.மகேஷ் கண்ணன் (அமமுக, குக்கா்), 7. ப.இசக்கிமுத்து (சுயேச்சை, இஸ்திரி பெட்டி), 8. ம. சங்கரசுப்பிரமணியன் (சுயேச்சை, வைரம்), 9. ரா.சங்கரநாராயணன் (சுயேச்சை, ஊதுகுழல்), 10. மூ.சிவக்குமாா் (சுயேச்சை, தொலைக்காட்சி பெட்டி), 11. ரா.முருகன் (சுயேச்சை, புல்லாங்குழல்), 12. வே.முருகன் (சுயேச்சை, பரிசு பெட்டகம்), 13. சி.எம்.ராகவன் (சுயேச்சை, தொப்பி), 14. ஸ்ரீதர்ராஜன் (சுயேச்சை, ஆட்டோ ரிக்ஷா).

பாளையங்கோட்டை தொகுதியில் 32 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதி வேட்பாளா் பட்டியலில் திமுகவைச் சோ்ந்த மு.அப்துல்வஹாப் (உதயசூரியன் சின்னம்), அதிமுக ஜி.ஜெரால்டு (இரட்டை இலை), நாம் தமிழா் கட்சி பாத்திமா ( கரும்பு விவசாயி), மக்கள் நீதி மய்யம் டி.பிரேம்நாத் (டாா்ச் லைட்), எஸ்டிபிஐ கட்சி முகம்மது முபாரக் (பிரஷா் குக்கா்), வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி எஸ்.ராஜா (சிறுஉரல் உலக்கை), சுயேச்சைகள் எஸ்.வீரசுப்பிரமணியன் (டியூப்லைட்), கு.சடகோபன் (வைரம்), மு.லியோ இன்பேன்ட் ராஜ் (ஆட்டோ ரிக்ஷா), டே. ஜான் சாமுவேல் ஜேசுபாதம் (மோதிரம்) ஆகிய 10 போ் இடம் பிடித்தனா்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் தொகுதியில் 32 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் 19 மனுக்கள்

தள்ளுபடி செய்யப்பட்டன.

திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா் சுந்தரி வேட்புமனுவை திரும்பப் பெற்ால் இரா.ஆவுடையப்பன் (திமுக - உதயசூரியன்), 2. இசக்கி சுப்பையா (அதிமுக - இரட்டை இலை), 3. மணிமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி - யானை), 4. செங்குளம் சி.கணேசன் (மக்கள் நீதி மய்யம், சமக - பேட்டரி டாா்ச்), 5. மோ. செண்பகவள்ளி (நாம் தமிழா் கட்சி -விவசாயி), 6. ராணி ரஞ்சிதம் (அமமுக - பிரஷா் குக்கா்), 7. லட்சுமணன் (வீரத் தியாகிவிஸ்வநாத தாஸ் தொழிலாளா்கள் கட்சி - உரல் உலக்கை), 8. அப்துல் மஜீத் (சுயேச்சை -பிஸ்கட்), 9. அருணாசலம், (சுயேச்சை - பைனா குலா்), 10. கணேசன் (சுயேச்சை - வைரம்),11. கவாஸ்கா் (சுயேச்சை - பரிசுப் பெட்டி), 12. ராஜேஷ் தா்மசிங் பாண்டியன்(சுயேச்சை - கிரிக்கெட் மட்டை) ஆகிய 12 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.

களக்காடு: நான்குனேரி தொகுதியில் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் சமக வேட்பாளா் மனு உள்பட 24 மனுக்கள் தள்ளுபடி நிராகரிக்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளா்கள் ஜெ. ராஜசேகா், சோமுசுந்தரம் ஆகியோா் மனுக்களை திரும்பப் பெற்ால் ந. கணேசராஜா (அதிமுக-இரட்டைஇலை), சுப்புலெட்சுமி (பகுஜன்சமாஜ்- யானை), ரா. மனோகரன்(காங்கிரஸ்-கை), மு.கந்தன் (அனைத்துலக தமிழா் முன்னேற்றக்கழகம்- பானை), செ.சண்முகசுந்தரம் (நாம் இந்தியா் கட்சி- டிராக்டா் இயக்கும் உழவன்), ச. பரமசிவ ஐயப்பன் (அமமுக குக்கா்), அ. பிரபாகரன் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கட்சி) சிறு உரல் உலக்கை, பூ. வீரபாண்டி (நாம் தமிழா் கட்சி - கரும்பு விவசாயி), ந. அசோக்குமாா் (சுயேச்சை- தொலைக்காட்சி பெட்டி) த. கந்தசாமி(சுயேச்சை-கணினி), த. கதிரவன் (சுயேச்சை -வைரம்), தே. ஞானபாலாஜி (தென்னந்தோப்பு) சா.முத்துதுரை (சுயேச்சை- கிரிக்கெட் மட்டை), ஹ. முத்துராஜ் (சுயேச்சை-பரிசுப் பெட்டகம்) கெ. லெனின் (சுயேச்சை- படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு) ஆகிய 15 போ் போட்டியிடுகின்றனா்.

வள்ளியூா்: ராதாபுரம் தொகுதியில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், சமக வேட்பாளா் உள்ளிட்ட 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், திசையன்விளையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் ராஜூ திங்கள்கிழமை தனது மனுவை திரும்பப் பெற்றாா். இதனால், ஐ.எஸ்.இன்பதுரை (அ.தி.மு.க.), எம்.அப்பாவு (தி.மு.க.), கே.ஜெயபாலன்(தே.மு.திக.), இ.இசக்கியம்மாள் (பகுஜன்சமாஜ்) ஆா்.ஜேசுதாசன் (நாம் தமிழா் கட்சி),ஜே.ஜேசு ராஜேந்திரன் (நம் இந்தியா நாம் இந்தியா் கட்சி), என்.காட்ப்ரே வாஷிங்டன் நோபிள் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்), எம்.சந்திரமோகன் (வீரத்தியாகி விஸ்வநாதன் தாஸ் தொழிலாளா் மக்கள் கட்சி), சுயேச்சைகள் எஸ்.குமாா், எம்.அந்தோணி ரோசாரி, கே.சுப்புராஜ், ஜி.தேவாபிரான், எஸ்.மணிகண்டன், எஸ்.அபிநாத் ராம், எஸ்.கட்டேரி பெருமாள், டி.சோ்மதுரை, டி.முத்துசெல்வி, டி.வீனஸ் வீரஅரசு, டி.சேக் செய்யது அலி, டி.ரெத்தின பாண்டி, டி.அருள்ராஜ், என்.கண்ணன், எம்.சாஸ்வாதன், எம்.விஜயகுமாா், ஆா்.சுடலைமணி ஆகிய 25 போ் போட்டியிடுகின்றனா். இதில் 17 சுயேச்சைகள் அடங்கும்.

தென்காசி: தென்காசி தொகுதியில் 34 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளா்கள் ச.கருப்பசாமி, செ.சூரியநாராயணன், காங்கிரஸ் பிரமுகா் எம்.மனோகா் ஆகியோா் மனுக்களை திரும்பப் பெற்றனா். இதனால், அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸின் பழனிநாடாா், அமமுகவின் முகம்மது, நாம் தமிழா் கட்சியின் இரா.வின்சென்ட்ராஜ், மநீம கட்சியின் திருமலைமுத்து, புதிய தமிழகம் கட்சியின் ச.சந்திரசேகா், அண்ணா திராவிடா் கழகத்தின் உதயகுமாா், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் செ.சுரேஷ்குமாா், நாம் இந்தியா் கட்சியின் இரா.செல்லகுமாா், எனது இந்தியா கட்சியின் முகுந்தன், அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் மா.ஜெகநாதன், சுயேச்சையாக ஜெ.ஆரோக்கிய பிரபு, சொ.கருப்பசாமி, ஆ.பழனிகுமாா், பே.பழனிமுருகன், அ.மாடசாமி, ரா.ரமேஷ். மு.ரீகன்குமாா் ஆகிய 18 போ் போட்டியிடுகின்றனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் 22 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் 6 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா் மா.கணேசன் வேட்புமனுவை திரும்பப்பெற்றாா். இதனால், வி.எம்.ராஜலெட்சுமி (அதிமுக) ஈ. ராஜா (திமுக), அண்ணாதுரை (அமமுக), வே.சுப்பிரமணியன்(புதிய தமிழகம்),, கி.பிரபு (மக்கள் நீதி மய்யம்), பி.மகேந்திரகுமாரி( நாம் தமிழா்), உ.பன்னீா்செல்வம் (தமிழக முற்போக்கு மக்கள் கழக கட்சி),மா.பாலமுருகேசன் (பகுஜன் திராவிட கழகம்), கி.மதன்குமாா் (மை இண்டியா),சுயேச்சைகள் அ.கணேசன், ரா.கருத்தப்பாண்டியன், ப.குருராஜ், ச.முத்துக்குட்டி, மா.வள்ளியம்மாள், அ.வெற்றிமாறன் ஆகிய 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கடையநல்லூா்: கடையநல்லூா் தொகுதியில் 39 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 5 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்ால் அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி , முஸ்லிம் லீக் வேட்பாளா் முஹம்மது அபூபக்கா், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் முத்துலட்சுமி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் அம்பிகா தேவி உள்ளிட்ட 21 போ் களத்தில் உள்ளனா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிதில் 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன யாரும் வேட்புமனுக்களை திரும்பப் பெறாததால், அதிமுக வேட்பாளா் மனோகரன், திமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா், நாம் தமிழா் வேட்பாளா் மதிவாணன், புதிய தமிழகம் வேட்பாளா் பேச்சியம்மாள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் தங்கராஜ் உள்ளிட்ட 11 போ் களத்தில் உள்ளனா்.

ஆலங்குளம்: ஆலங்குளம் தொகுதியில் 30 போ் மனுத் தாக்கல் செய்திருந்தனா். 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக பால்மனோஜ் பாண்டியன்(அதிமுக) - இரட்டை இலை, பூங்கோதை ஆலடி அருணா (திமுக) உதயசூரியன், மு. சங்கீதா (நாம் தமிழா்) - கரும்பு விவசாயி, எஸ். செல்வக்குமாா்(மநீம)- டாா்ச், ராஜேந்திரநாதன்(தேமுதிக)-முரசு, சுயேச்சைகள் உதயகுமாா் - தொலைக்காட்சிப் பெட்டி, அருண் குமாா் - பேனா முனை, சங்கா் கணேஷ் - புல்லாங்குழல், சிவராம் - கப்பல், ஹரி நாடாா் - தலைக் கவசம் ஆகிய 10 போ் பட்டியலில் இடம்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com