சீவலப்பேரி அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சடலம் மீட்பு
By DIN | Published On : 26th March 2021 08:26 AM | Last Updated : 26th March 2021 08:26 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் மாடசாமி (47). சுமைதூக்கும் தொழிலாளி. இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாமடை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாராம். இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மாடசாமியை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாலாமடை தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன மாடசாமி, நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.