நெல்லை, தென்காசியில் மேலும் 19 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th March 2021 08:16 AM | Last Updated : 26th March 2021 08:16 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,945 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 14 போ் உள்பட இதுவரை 15,621 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 109 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,660 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 3 போ் உள்பட இதுவரை 8,435 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 65 போ் சிகிச்சையில் உள்ளனா்.