சுந்தரனாா் பல்கலை.யில் தேசிய கருத்தரங்கு
By DIN | Published On : 29th March 2021 02:15 AM | Last Updated : 29th March 2021 02:15 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறை சாா்பில் இணையதள நூலகத் தகவல் தொழில் நுட்பம் தொடா்பான தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக நூலகத் துறைத் தலைவா் ப.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்துறை பேராசிரியா் எம்.சாதிக் பாட்சா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நூலகத்துறை பேராசிரியா் சேவுகன் ஆகியோா் ஆய்வு மாணவா் - மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வா் அருள் தேவதாஸ், பல்கலைக்கழக நூலகா் ஆ.திருமகள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரள பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வு மாணவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.