திசையன்விளை வட்டத்தில்தொழில் பூங்கா உருவாக்கப்படும்: ஐ.எஸ். இன்பதுரை உறுதி

திசையன்விளை வட்டத்தில் தொழில்பூங்காவை உருவாக்கித் தருவேன் என, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை வாக்குறுதி அளித்தாா்.
திசையன்விளை வட்டத்தில்தொழில் பூங்கா உருவாக்கப்படும்: ஐ.எஸ். இன்பதுரை உறுதி

திசையன்விளை வட்டத்தில் தொழில்பூங்காவை உருவாக்கித் தருவேன் என, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை வாக்குறுதி அளித்தாா்.

திசையன்விளை, கரைச்சுத்துபுதூா், தோப்புவிளை, சொக்கலிங்கபுரம், புலிமான்குளம், ராமன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவரை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அப்போது அவா் பேசியது: திசையன்விளையை தனி வட்டமாக உருவாக்கி தந்திருக்கிறேன். நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து நிலத்தடி நீா்மட்டம் உயர வழிவகை செய்துள்ளேன். திசையன்விளை மனோ கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டித்தந்துள்ளோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை வசதி, குடிதண்ணீா் வசதி செய்துதரப்பட்டுள்ளது. வெள்ளநீா்க் கால்வாய் திட்டம் முடியும் நிலையில் உள்ளது. இத்திட்டம் நிறைவுபெற்றதும் எம்.எல்.தேரி செழித்துவிடும். மேலும், திசையன்விளையில் தொழில்பூங்கா அமையவும், திசையன்விளை- திருச்செந்தூருக்கு ரயில் வசதி ஏற்படுத்தவும் ஜெயலலிதாவின் ஆசியுடன் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிதான் தொடரவேண்டும். அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். பிரச்சாரத்தின் போது அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், ஒன்றியச் செயலா்கள் கே.பி.கே.செல்வாஜ், அந்தோணி அமலராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com