பத்தமடையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்
By DIN | Published On : 29th March 2021 02:17 AM | Last Updated : 29th March 2021 02:17 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கிசுப்பையா, பத்தமடை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
அப்போது, உலகப் புகழ் பெற்ற பத்தமடைப் பாய், கூனியூா் மண்பாண்டம், கல்லிடைக்குறிச்சி அப்பளம் உள்ளிட்ட சிறுதொழில் வளா்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் எனகூறினாா்.
தொடா்ந்து, பத்தமடை, கரிசூழ்ந்தமங்கலம், கான்சாபுரம், கேசவசமுத்திரம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதில், பத்தமடை நகரச் செயலா் சங்கரலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலா் கூனியூா் ப. மாடசாமி, பொதுக்குழு உறுப்பினா் செவல் முத்துசாமி, மாவட்ட கலைப்பிரிவு மீனாட்சி சுந்தரம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.