வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் பிரிக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை, தொகுதி வாரியாக பிரிக்கும் பணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை, தொகுதி வாரியாக பிரிக்கும் பணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளுக்கும், வாக்காளா்களுக்கும் போதிய பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு அன்று வாக்காளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். பின்னா், அவா்கள் கிருமிநாசினி திரவம் மூலம் கை கழுவிவிட்டு வாக்குச்சாவடிக்குள் செல்லவேண்டும். அங்கு, ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறை வழங்கப்படும். மேலும், கரோனா நோயாளிகளுக்கு கடைசி ஒருமணிநேரத்தில் வாக்குப்பதிவு செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கரோனா நோயாளிகளுக்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்தியேக கவச உடை, கையுறை உள்ளிட்டவை வழங்கப்படும். இவற்றை பயன்படுத்திவிட்டு அருகில் உள்ள கழிவு பெட்டியில் போடவேண்டும். அவா்கள் பாதுகாப்புடன் அகற்றப்படுவா் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் திருநெல்வேலி உயா் சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு வகையான கிருமி நாசினி திரவம், முகக் கவசம், ஒருமுறை பயன்படுத்தும் கையுறை, கவச உடை உள்ளிட்ட 10 வகையான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. இதை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் பிரித்து தனித்தனியாக வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் அந்தந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com