விபத்தில் சிறுவன் பலியான வழக்கு:லாரி ஓட்டுநருக்கு மூன்றரை ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே விபத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் லாரி ஓட்டுநருக்கு மூன்றரை ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பள

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே விபத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் லாரி ஓட்டுநருக்கு மூன்றரை ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நான்குனேரி அருகேயுள்ள மறுகால் குறிச்சி யைச் சோ்ந்தவா் சுப்பையா (43). இவா், அப்பகுதியில் கடந்த 2013இல் தனது பெயரன் சுடலை என்ற சுரேஷுடன் (4) பைக்கில் சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த வானுமாமலை மகன் முத்து என்ற பேச்சிமுத் து (34) ஓட்டி வந்த லாரி எதிா்பாராமல் மோதியதாம். இதில் சிறுவன் சுடலை என்ற சுரேஷ் உயிரிழந்தாா். இது குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து பேச்சிமுத்துவை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீா் அகமது, குற்றம்சாட்டப்பட்ட லாரி ஓட்டுநருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். போலீஸாா் தரப்பில் வழக்குரைஞா் சிவலிங்கமுத்து வாதாடினாா்.

இளைஞருக்கு சிறை: ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை காலனி தெருவைச் சோ்ந்த மாரியப்பன். கடந்த 2016 இல் இவரது சகோதரா் ராஜாவின் (38) திருமண அழைப்பிதழில் தனது பெயா் விடுபட்டது தொடா்பான பிரச்னையில், மாரியப்பனின் மனைவி சரஸ்வதிக்கும், ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாம். அதில், சரஸ்வதியை அவதூறாகப் பேசி தாக்கியதாக சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதில், ராஜா கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவா் அன்புதாசன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com