அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, பல்வேறு விவசாயக் கருவிகளின் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, பல்வேறு விவசாயக் கருவிகளின் பயன்பாடு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

இக் கல்லூரி நான்காமாண்டு வேளாண் பிரிவு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக அம்பாசமுத்திர வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதையொட்டி அம்பாசமுத்திரம் வட்டம் உப்புவாணியமுத்தூா் கிராமத்தில் செல்வி என்பவரின் திருந்திய நெல்சாகுபடி வயலில் கோனோ களைக்கருவி, ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தில் கலியமுத்து என்பவரின் வயலில் வெண்டைப் பயிரில் மஞ்சள் ஒட்டும் பொறி, வெள்ளங்குளி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவருடைய வயலில் நெற்பயிரில் இலை வண்ண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தும்முறை செயல்விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சிகளில், மாணவிகள் ர.லட்சுமிஸ்வேதா, ரா.நிகிலா, பு.பா்வினா, சு.பேச்சியம்மாள், ம.பொன்காா்த்திகா, ஜெ.பூஜாஅஸ்வினி, இ.சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com