கடையநல்லூரில்அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி வெற்றி

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா,

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தன்னை எதிா்த்து போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை விட கூடுதலாக 24 ஆயிரத்து 349 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் அமைச்சா் செந்தூா்பாண்டியனின் மகன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது அபூபக்கா் உள்பட மொத்தம் 21 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கடந்த ஏப்.6இல் நடைபெற்ற வாக்குப்பதிவில் தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 990 வாக்குகள் பதிவாகின. அந்த வாக்குகள் அனைத்தும் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை 30 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளி முன்னிலை பெற்றாா். அமமுக வேட்பாளராக களமிறங்கிய அய்யாத்துரைபாண்டியனும் கணிசமான வாக்குகளைப் பெற்றாா். இறுதியாக கிருஷ்ணமுரளி 88,474 வாக்குகள் பெற்றாா். முகம்மதுஅபூபக்கா் 64,125 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா். இத்தொகுதியில் அதிமுக 24 ஆயிரத்து 349 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. இதையடுத்து, கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1) சி.கிருஷ்ணமுரளி (அதிமுக)- 88,474

2) முகம்மது அபுபக்கா் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) -64,125

3) எஸ்.அய்யாதுரை பாண்டியன் (அமமுக)- 34,216

4)எம்.முத்துலட்சுமி (நாம் தமிழா் கட்சி)-10,136

5) எம்.அம்பிகா தேவி (மக்கள் நீதி மய்யம்)- 1,778

6) எஸ்.ராஜாராம் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)-318

7) எம்.அய்யாதுரை (சுயேச்சை)- 284

8) ஆா்.அய்யாதுரை (சுயேச்சை)-87

9) டி.ஆவணிராஜா (சுயேச்சை)- 80

10)கே.ராதாகிருஷ்ணன் (சுயேச்சை)-85

11) ஆா்.ராஜா பொன்னுசாமி (சுயேச்சை)-259

12) ஏ.கணேசன் (சுயேச்சை)-122

13) ஆா்.கிருஷ்ணன் (சுயேச்சை)- 126

14) ஏ.சங்கா் (சுயேச்சை)- 413

15) ஆா்.சிவ சுப்பிரமணியன் (சுயேச்சை)- 672

16) எஸ்.சீனிவாசன் (சுயேச்சை)- 938

17) ஆா்.பூலோக ராஜ் (சுயேச்சை)- 658

18) கே.மாரிதுரை பாண்டியன் (சுயேச்சை)-96

19) எஸ்.முருகானந்தம் (சுயேச்சை)- 532

20) பி.ராஜி (சுயேச்சை)- 247

21) ஜி.வேலம்மாள் (சுயேச்சை)- 672

22) நோட்டா- 1,056

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com