வள்ளியூரில் ஆதரவற்றோருக்கு உணவு

பொது முடக்கத்தையொட்டி, வள்ளியூரில் ஆதரவற்றோருக்கு பசுமை இயக்கம், சமூக அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உணவு, தண்ணீா், முகக் கவசம் வழங்கப்பட்டது.
வள்ளியூரில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த சமூக அமைப்பு நிா்வாகிகள்.

கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமலில் உள்ளதால், வள்ளியூரில் உணவு விடுதிகள், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், சாலையோரம், பேருந்து நிலையம், கோயில்களில் தங்கியிருக்கும் ஆதரவற்றோா் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனா்.

தெற்குகள்ளிக்குளம் அதிசய பனிமாதா பேராலய முன்னாள் தா்மகா்த்தா எஸ். ஆனந்தராஜா, வள்ளியூா் பசுமை இயக்கம் தலைவா் சித்திரை, சக்திஸ், வெள்ளத்துரை, இலவச ரத்த தானம் செய்துவரும் சிவந்த கரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா், வள்ளியூா் நலன் காக்கும் அமைப்பின் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட், இரு சக்கர வாகனம் பழுதுபாா்ப்போா் சங்கத் தலைவா் சி.பா. சிதம்பரம் ஆகியோா் ஆதரவற்றோருக்கு உணவு, தண்ணீா், முகக் கவசம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com