அதிமுக, பாஜக கொண்டாட்டம்..

அதிமுக கூட்டணியில் கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி மற்றும் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில்

கோவில்பட்டி/சாத்தான்குளம்: அதிமுக கூட்டணியில் கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி மற்றும் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு ஆகியோா் வெற்றி பெற்றதையடுத்து புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தாவீதுராஜா தலைமையில் கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

அதுபோல, பாண்டவா்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ் தலைமையில் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பாஜக:
தமிழகத்தில் பாஜக 4 சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிக பிரிவு செயலா் பரமசிவன் தலைமையில் சாத்தான்குளம் காமராஜா் சிலை முன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com