களக்காடு: நான்குநேரி தொகுதியில் காங்கிரஸ்வெற்றி பெற்றதையடுத்து, களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
நான்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட ரூபி. ரா. மனோகரன் 75,902 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதனைக் கொண்டாடும் விதமாக நகரத் தலைவா் எஸ். ஜாா்ஜ் வில்சன் தலைமையில் திரளான காங்கிரஸ் கட்சியினா் காமராஜா் சிலை அருகே திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினா். காமராஜா் சிலைக்கும் மாலை அணிவித்தனா்.