நெல்லை ஆதாா் மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தீவிரம்

திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள ஆதாா் பதிவு மையங்களில், கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள ஆதாா் பதிவு மையங்களில், கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கான முகவரிச் சான்றாக ஆதாா் அடையாள அட்டையே பிரதானமாக கருதப்படுகிறது. பள்ளிகளில் மாணவா் சோ்க்கை, பத்திரப்பதிவு உள்பட பல்வேறு வகையான பணிகளுக்கும் ஆதாா் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆதாா் அடையாள அட்டை வழங்கவும், ஏற்கெனவே ஆதாா் பெற்றவா்கள் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களைசெய்து கொள்ளவும் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அஞ்சலங்களிலும் ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம் மையங்களில் புதிதாக ஆதாா் பெற வருவோருக்கு விரல் ரேகை பதிவு கட்டாயமாகும். இந்தப் பணியின்போது கரோனா பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, ஆதாா் மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளா்வுகள் அளிக்கப்பட்டதும் ஆதாா் சேவை மையங்கள் திறக்கப்பட்டன. இப்போது கரோனா 2 ஆவது அலையால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு முன்னெச்சரிக்கையை கூடுதலாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சமூக இடைவெளிவிட்டு நாளொன்றுக்கு அதிகபட்சம் 15 போ் வரையே புதிதாக ஆதாா் அடையாள அட்டை பெற அழைக்கப்படுகிறாா்கள். அவா்கள் விரல்ரேகைகளை இயந்திரத்தில் பதிவு செய்யும் முன்பு இருமுறை கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர முகக்கவசம் அணிந்து வருதல் உள்ளிட்டவையும் பின்பற்றப்படுகிறது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என்றனா்.

பயக03அஅபஏஅத: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள ஆதாா் சேவை மையத்தில் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பெண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com