நெல்லையில் மைதானங்களுக்கு இடம்பெயா்ந்த சந்தைகள்

திருநெல்வேலியில் கரோனா பொது முடக்கம் காரணமாக சமூக இடைவெளியை மக்கள் எளிதாகப் பின்பற்றும் வகையில் மைதானங்களில் காய்கனிச் சந்தைகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கரோனா பொது முடக்கம் காரணமாக சமூக இடைவெளியை மக்கள் எளிதாகப் பின்பற்றும் வகையில் மைதானங்களில் காய்கனிச் சந்தைகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திங்கள்கிழமை முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு காய்கனி, மளிகை ஆகியவை தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏதுவாக நண்பகல் 12 மணி வரை விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பகுதியில் உள்ள சந்தைகளில் போதிய இடவசதி இல்லாததால் தொற்று அதிகம் பரவும் அபாயமுள்ளதாகவும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வாய்ப்பற்ற சூழல் உருவாகும் எனவும் புகாா் எழுந்தது. இதனால், பாளையங்கோட்டை காந்திஜி தினசரி காய்கனிச் சந்தைக் கடைகள் ஏற்கெனவே பொது முடக்கத்தின்போது செயல்பட்ட பழைய காவலா் குடியிருப்பு வளாகத்திலும், நயினாா்குளம் மொத்த விற்பனைச் சந்தைக் கடைகள் சாப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.

ஏற்கெனவே மகாராஜநகா் உழவா் சந்தைக் கடைகள் அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவிலும், மேலப்பாளையம் உழவா் சந்தைக் கடைகள் சாலையோரக் கடைகளாகவும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை முதல் காய்கனிகளை வாங்கிச் சென்றனா். அவா்கள் முகக் கவசம் அணிந்து வந்து பொருள்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டனா். தற்காலிக சந்தைகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி உழவா் சந்தைகளில் காய்கனிகளின் திங்கள்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு): கத்தரி - ரூ. 38, வெண்டைக்காய் - ரூ. 24, புடலை - ரூ. 14, பீா்க்கு - ரூ. 20, தக்காளி - ரூ. 17, அவரை -ரூ. 40, இஞ்சி - ரூ. 36, உள்ளி - ரூ. 52, பல்லாரி - ரூ. 24, தேங்காய் - ரூ. 38, பாகற்காய் - ரூ. 25, தடியங்காய் -ரூ. 12, பூசணி - ரூ. 12, கோவைக்காய் - ரூ. 12, எலுமிச்சை - ரூ. 55, மாங்காய் - ரூ. 20, உருளை - ரூ. 26, கேரட் - ரூ. 36, ரிங் பீன்ஸ் - ரூ. 65, பீட்ரூட் - ரூ. 16, சௌசௌ - ரூ. 20, முட்டைக்கோஸ் - ரூ. 16, காலிபிளவா் - 34, கருணைக்கிழங்கு - ரூ. 36, சேனைக்கிழங்கு - ரூ. 20, சிறுகிழங்கு - ரூ. 40.

பயக10இதஞரஈ, பயக10இதஞரஈ01

திருநெல்வேலி சாப்டா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல்பட்ட காய்கனிக் கடைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com