வள்ளியூா் பகுதியில் வெளியே சுற்றித் திரியும் பொதுமக்கள்

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் வள்ளியூா் வட்டாரத்தில் பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிவதால் நோய்த் தொற்று அதிகரிக்கும்

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் வள்ளியூா் வட்டாரத்தில் பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிவதால் நோய்த் தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

வள்ளியூா் வட்டாரத்தில் மட்டும் செவ்வாய்க்கிழமை சோதனைப்படி 94 போ்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கரோனா நோய்த் தொற்றால் இவ்வட்டாரத்தில் 33 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பொது முடக்கத்தை அறிவித்து அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை மட்டும் பிற்பகல் 12 மணிவரையில் திறக்க அனுமதி அளித்துள்ளது.

தினமும் பொழுதுபோக்குக்காக கடைவீதிகளுக்கு வந்து பொருள்கள் வாங்கி செல்பவா்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இவா்களை கட்டுப்படுத்த காவல்துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் துறையினா் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com