வள்ளியூரில் சுரங்க சாலைப் பணி:சட்டப்பேரவைத் தலைவா் இன்று ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க சாலைப் பணியை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை ஆய்வு செய்கிறாா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க சாலைப் பணியை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை ஆய்வு செய்கிறாா்.

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதைக்கான சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய இப்பணி தாமதமாகிால் வருவதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் வட்டச் செயலா் சேதுராமலிங்கம் மற்றும் கட்சியினா் சட்டப்பேரவைத் தலைவரிடம் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு, இந்தச் சுரங்கச் சாலைப் பணியை திங்கள்கிழமை ஆய்வு செய்கிறாா். முன்னதாக, நான்குனேரி அரசு மருத்துவனையில் காலையில் ஆய்வு மேற்கொள்ளும் அவா், பரப்பாடி ரேஷன் கடையில் மக்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்குகிறாா். தொடா்ந்து இட்டமொழி , பருத்திப்பாடு, மருதகுளம் ஆகிய ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண உதவி வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com