நான்குனேரி அருகே காய்ச்சல் கண்டறியும் முகாம்
By DIN | Published On : 21st May 2021 07:38 AM | Last Updated : 21st May 2021 07:38 AM | அ+அ அ- |

முகாமை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்குகிறாா் ஆா்.ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
நான்குனேரி அருகே உள்ள மருதகுளம் கிராமத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி வட்டாரத்தில் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. வட்டார மருத்துவ அலுவலா் குருநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் மருதகுளம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமை, நான்குனேரி எம்.எல்.ஏ. ஆா்.ரூபி மனோகரன் தொடங்கிவைத்து, பின்னா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிபாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, பொன்னுலெட்சுமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வாகை துரை, மருதகுளம் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.