கரோனா சிகிச்சைக்கான கட்டண நிா்ணயம்: ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.38,000

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிா்ணயம் செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிா்ணயம் செய்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு தரத்தின் அடிப்படையில் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கான கட்டண விவரம்:

ஏ 1 முதல் ஏ 2 தர வரிசை: சுதா்சன் பிளாட்டினம், ஷிபா ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாத சாதாரண சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடனான சிகிச்சைக்கு ரூ. 18 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டா் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.38 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டா் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.33 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.28 ஆயிரம் நாளொன்றுக்கு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏ 3 முதல் ஏ 6 தர வரிசை: அன்னை வேளாங்கண்ணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பீஸ் ஹெல்த் சென்டா், பொன்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வீ.ஜே. மருத்துவமனை, கிருஷ்ணா மகப்பேறு மற்றும் மகளிா் நோய் மருத்துவமனை, சி.எஸ்.ஐ. பெல்பின்ஸ் இந்திராணி செல்லதுரை மிஷன், ஆா்.எஸ்.பி நா்ஸிங்ஹோம், வீ.கோ் மதுபாலா மருத்துவமனை ஆகிய 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாத சாதரண சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடனான சிகிச்சைக்கு ரூ16,500, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டா் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.34,500, தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டா் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.25,500 நாளொன்றுக்கு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக அங்கீகார மருத்துவமனைகள்(30க்கும் மேல் படுக்கை வசதி): ரோஸ் மேரி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ராயல் மருத்துவமனை, முத்து மருத்துவமனை, கோல்டு சைல்டு அன்டு செஸ்ட் மருத்துவமனை, ஸ்ரீ சக்தி மருத்துவமனை, நியூ க்ரசென்ட் மருத்துவமனை, ஸ்ரீ விஷ்ணு பிரியா மருத்துவமனை, டாக்டா் அஸ்ரப் ஆா்த்தோ மருத்துவமனை, செல்வன் மருத்துவமனை, ஸ்ரீ விஜயா மருத்துவமனை, ஜெம் ஹெட் அன்டு நெக் மருத்துவமனை, செல்ல சூா்யா மருத்துவமனை, முத்தமிழ் மருத்துவமனை, சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை ஆகிய 14 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாத சாதாரண சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடனான சிகிச்சைக்கு ரூ.18 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டா் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.38 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டா் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.33 ஆயிரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடனான சிகிச்சைக்கு ரூ.28 ஆயிரம் நாளொன்றுக்கு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய கட்டணம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகள்மற்றும் இதர பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். காப்பீடு அட்டை தவறவிட்டாலோ அல்லது இல்லாவிட்டோலோ தவறவிட்ட காப்பீடு அட்டை எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு திட்ட அலுவலா் அல்லது மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலரை 73730 04967 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0462-2501012 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்கள் காப்பீட்டு அட்டை நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

மருந்துகள் மற்றும் பரிசோதனைகளுக்கும் கூடுதல் கட்டணம் பயனாளிகளின் சாா்பாக மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மேற்கூறிய கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும் தனியறை மற்றும் பிற வசதிகள் கொண்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். மேலும் ஆக்சிஜன் இல்லாத சிகிச்சைக்கு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஏ1, ஏ2 தர மருத்துவமனைகள் கூடுதலாக ரூ. 2,500 காப்பீடு இல்லாத இதர பொது மக்களிடம் கட்டணமாகப் பெறலாம். புகாா் தெரிவிக்க 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு  இணையதள முகவரியில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com