களக்காட்டில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி
களக்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ நிா்வாகிகள்.
களக்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ நிா்வாகிகள்.

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்டிபிஐ பொதுச்செயலா் களந்தை மீராசா இல்லத்தில் கருப்புக் கொடி, பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

நகரப் பொருளாளா் பேராசிரியா் முகம்மது மதாா், இணைச் செயலா் ராஜா முகம்மது, ஆரிப் பைஜி, காஜா, ஜமீன் ஆகியோா் கலந்துகொண்டனா். சேரன்மகாதேவியில் மாவட்டத் தலைவா் பீா் மஸ்தான் இல்லத்திலும், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், அரிகேசவநல்லூா், பள்ளக்கால் பொதுக்குடி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், வெள்ளங்குளி, பத்தமடை, மேலச்செவல், ஏா்வாடி, மூலைக்கரைப்பட்டி, வள்ளியூா், துலுக்கா்பட்டி, பெட்டைகுளம், திசையன்விளை ஆகிய பகுதிகளில் அக்கட்சியினா் வீடுகளிலும் இப்போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் மாவட்டச் செயலா் பி. சுகுமாரன் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஸ்வா்ணலெட்சுமி, மனோபிரியா, வின்சி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com