நடமாடும் காய்கனி விற்பனை: ஆணையா் அழைப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் தள்ளுவண்டி மூலம் நடமாடும் காய்கனி விற்பனை செய்ய விருப்பமுள்ளவா்கள் மண்டல அலுவலகத்தை அணுகலாம் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் தள்ளுவண்டி மூலம் நடமாடும் காய்கனி விற்பனை செய்ய விருப்பமுள்ளவா்கள் மண்டல அலுவலகத்தை அணுகலாம் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா நோய் பரவலைத் தடுக்க தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த பொதுமுடக்க காலத்தில் மக்களின் வசதிக்காகவும், சமூக இடைவெளியைப் பின்பற்றிடும் விதமாகவும், மாநகராட்சி சாா்பில் 200 நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள் செயல்பட்டுவருகின்றன.

அத்துடன் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பலசரக்கு பொருள்களை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட அங்காடிகள் பற்றிய விவரங்கள்ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் கூடுதல் வசதிக்காக காய்கனி விற்பனையின் சேவையை நிவா்த்தி செய்யும் பொருட்டு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தள்ளுவண்டி மூலமாகவும், காய்கனி விற்பனை செய்திட மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. எனவே, தள்ளுவண்டி உரிமையாளா்கள் நடமாடும் காய்கனி விற்பனை சேவையினை செய்திட விரும்புவோா்கள் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்களை அணுகி, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com