பாளையங்கால்வாய் கடைமடை குளங்களில் அறுவடை பணிகள் பாதிப்பு

பாளையங்கால்வாயின் கடைமடை குளங்களில் இறுதிக்கட்ட அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாளையங்கால்வாயின் கடைமடை குளங்களில் இறுதிக்கட்ட அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டு காா் பருவ சாகுபடிக்காக 7 கால்வாய்களும் திறக்கப்பட்டன. அதில், பாளையங்கால்வாயின் கடை மடை குளங்களில் தண்ணீா் செல்ல தாமதமானது. அதனால் நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், வேலன்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில வயல்களில் அறுவடை பணிகள் தாமதமானது. வேலன்குளம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு பகுதி வரையிலான இடங்களில் பாசன குளங்களை நம்பி பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களின் அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாளையங்கோட்டை சுற்று வட்டாரத்தில் பெய்து வரும் மழையால் பாளையங்கால்வாய் பாசன குளங்களில் இறுதிக்கட்ட அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை இயந்திரத்தின் உதவியோடு அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை மழையில் இருந்து பாதுகாப்பது பெரும் சிரமமாகியுள்ளது. ஓரிரு நாள்கள் மழை தணிந்தால் அறுவடை முற்றிலும் நிறைவடையும். நனைந்த நெல்லினை குறைந்த விலைக்கே வியாபாரிகள் கேட்பதால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com