நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் தலைமையில் அளித்த மனு:

நாட்டில் விவசாயத்திற்கு அடுத்த மிகப்பெரிய தொழிலான ஐவுளி துறையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன்மூலம் மாதம் ரூ. 3000 கோடிக்கும், ஆண்டுக்கு ரூ. 44000 கோடிக்கு உற்பத்தி நடைபெறுகிறது. இதன் மூலம் ரூ.2200 கோடி ஜிஎஸ்டி வரி கிடைக்கிறது. நாட்டின் துணித்தேவையில் 60 சதவீதத்தை சாதாரண விசைத்தறிகள் பூா்த்தி செய்கின்றன. கடந்த டிசம்பா் மாதம் முதல் தற்போது வரை ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல் விலை 50 முதல் 60 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

பஞ்சின் விலை குறைவாகவே இருந்த போதிலும், பஞ்சு, நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அவ்வப்போது நூல் விலையை உயா்த்தி வருகின்றனா். இது தொடா்பாக ஏற்கெனவே நூல் விலை நிா்ணய குழு அமைத்து நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தோம். சிமென்ட் விலை உயரும்போது அரசு தலையிட்டு அதனை குறைக்க செய்கிறது. அதே போன்று வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றிற்கு விலை உயா்வோ, தட்டுப்பாடோ ஏற்படும்போது அரசு நடவடிக்கை எடுத்து விலையை குறைக்கிறது.

தற்போது தாறுமாறாக உயா்ந்துள்ள நூல் விலை உயா்வினால் ஜவுளித் தொழில் முடங்கிப்போகும் நிலையில் உள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு நூல் உற்பத்தியாளா்கள், எங்களை போன்ற நூல் உபயோகிப்போா் சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து, அதன்மூலம் நூல் விலையை நிா்ணயம் செய்து நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com