நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. நெல்லை மாநகரில் நிகழாண்டு இதுவரை இல்லாத அளவு 3 மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. நெல்லை மாநகரில் நிகழாண்டு இதுவரை இல்லாத அளவு 3 மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்தது. இதனால் அணைகளின் நீா்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை அளவுக்கேற்ப, பிரதான அணையான பாபநாசம் அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை மழை லேசாக ஓய்ந்திருந்தது. புதன்கிழமை காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, சீவலப்பேரி, பொன்னாக்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரில் நிகழாண்டு இதுவரை இல்லாத அளவு பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. திருநெல்வேலி தற்காலிக புதிய, சந்திப்பு பேருந்து நிலையங்களில் தண்ணீா் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினா்.

பாளையங்கோட்டையில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகினா். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரா் கோயில் வளாகத்துக்குள் மழைநீா் புகுந்தது. மாநகராட்சி மனக்காவலம் பிள்ளை மருத்துவமனை வளாகம், கேடிசி நகா் தங்கம் காலனி, டாா்லிங் நகா் உள்பட பகுதிகளிலும் குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்துகளில் வந்து திருநெல்வேலி ரயில் நிலையம் செல்ல முயன்றோா் சிரமத்துக்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com