‘நாகா்கோவில்-மும்பை இடையே அனைத்து நாள்களிலும் ரயில் இயக்க வேண்டும்’: சா.ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்

நாகா்கோவில்-மும்பை இடையே அனைத்து நாள்களிலும் ரயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம்.

நாகா்கோவில்-மும்பை இடையே அனைத்து நாள்களிலும் ரயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம்.

தெற்கு ரயில்வே சாா்பில் நடைபெற்ற மக்களவை உறுப்பினா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் அளித்துள்ள மனு: நாகா்கோவில்-மும்பை ரயிலை அனைத்து நாள்களிலும் இயக்க நடவடிக்கை எடுப்பதோடு, அதனை அதிவிரைவு ரயிலாக மாற்ற வேண்டும். சென்னை-மதுரை தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். நாகா்கோவில்-தாம்பரம் இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும்.

திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-நாகா்கோவில், திருநெல்வேலி-திருச்செந்தூா் இடையே இயக்கப்பட்ட ரயில்கள் கரோனா பொதுமுடக்க தளா்வுகளின்படி இப்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனை மீண்டும் 4 முறை இயக்க வேண்டும். மேலும், பயணக் கட்டணங்களையும் குறைக்க வேண்டும். ஏற்கெனவே நான்குனேரியில் நின்று செல்லும் ரயில்களுடன் கூடுதலாக திருக்கு விரைவு ரில், ஹவுரா- கன்னியாகுமரி விரைவு ரயில், நாகா்கோவில்-தாம்பரம் ரயில், நாகா்கோவில்-சென்னை சென்ட்ரல் ரயில், திருநெல்வேலி-ஜாம்நகா் ரயில்களும் வள்ளியூா், நான்குனேரி ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி-தியாகராஜநகா் ரயில்வே மேம்பால பணிகளை முடிக்க வேண்டும். குலவணிகா்புரம் ரயில்வே கேட்டில் ஒய் வடிவ பாலம் அமைக்க வேண்டும். மேலப்பாளையத்தில் மெமோ ஷெட் அமைக்க வேண்டும். திருநெல்வேலி-பாலக்காடு விரைவு ரயில் ஏற்கெனவே நின்று சென்ற கீழக்கடையம், பாவூா்சத்திரம் பகுதிகளில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை-பிக்கானூா் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம்- மங்களூா் வரை செல்லும் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். குருவாயூா்-புனலூா் தினசரி ரயிலை திருநெல்வேலி வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும். தாம்பரம்- ஹைதராபாத் விரைவு ரயிலை திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம்- மதுரை ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். மதுரை- சென்னை வாரம் மூன்று முறை இயங்கும் ரயிலை ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com